மிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இதன்பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிய காஜலுக்கு பழையபடி தெலுங்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால், தமிழில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

Advertisment

cc

அந்தவகையில் கமலின் "இந்தியன்-2' படத்தில் நடித்துவரும் காஜல், "கருங்காபியம்', "கோஷ்டி' என இன்னும் 2 தமிழ்ப் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மீண்டும் தெலுங்கு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. இதனால் குஷியடைந்த காஜல், உடனே படக்குழுவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் அவரது 108-வது படமாக உருவாகும் படத்திற்கு காஜல் அகர்வால் கமிட்டாகியுள்ளாராம். முதல் முறையாக பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கவுள்ளதால், தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் குவியும் என நம்பிக்கையில் உள்ளாராம் காஜல் அகர்வால்.

கைமாறும் டைரக்ஷன்?

"கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தனது 50-வது படத்திற்காக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்த்துள் ளார். இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும், காளி தாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், விஷ்ணுவிஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்ப தாகவும் தகவல் வெளி யானது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வரும் தனுஷ், தற்போது திரைக்கதை பணிகளில் இயக்குநர் மித்ரன் ஜவஹரை இணைத்துள்ளார். மேலும் டைரக்ஷன் பணிகளையும் அவரிடமே கொடுத்துவிட யோசித்து வருகிறாராம். மித்ரன் ஜவஹர் நீண்டகாலமாக தனுஷுடன் பயணித்து வருவதாலும், தனுஷை வைத்து "யாரடி நீ மோகினி', "குட்டி', "திருச்சிற்றம்பலம்' என சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளதாலும், இந்த யோசனையில் இறங்கியுள்ளாராம் தனுஷ்.

லால் -கமல் -ஜீவா!

cc

நடிகர் ஜீவா அவரது கலகல பேச்சுபோல, கலகலப்பான கதாபாத்திரத்தில் பல படங்களில் கேமி யோவாக வந்து சென்றுள்ளார். இதற்கு ரசிகர்களின் வரவேற்பும் உண்டு. இந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப் பில் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக் கத்தில் பிரமாண்ட மாக உருவாகும் "மலைக் கோட்டை வாலிபன்' படத்தில் கேமியோ ரோலில் ஜீவா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த கதாபாத்திரம் வழக்கமாக அவர் வந்து போகும் கலகல கதா பாத்திரமாக இருக்குமா என்பது ரசிகர்களின் கேள்வி யாக இருக்கிறது. ராஜஸ்தானில் மிகத் தீவிரமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்... முன்னதாக கமல் சிறப்பு தோற்றத்தில் நடிப்ப தாகவும் கூறப்பட்டது. தற்போது கமலுடன், ஜீவாவும் இணைந்து இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மோகன்லால் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான "கீர்த்தி சக்ரா' படத்தில் ஜீவா நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

நான்ஸ்டாப் ராம்!

இயக்குநர் ராம், "பேரன்பு' படத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படமான "ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து எப்போதும்போல், தன் படங்களுக்கு ஆண்டுக் கணக்கில் இடைவெளி எடுத்துக் கொள்ளும் ராம், இந்த முறை அதை தவிர்த்துள்ளார். "ஏழு கடல் ஏழு மலை' படத்தின் பணிகளை கவனித்து கொண்டே, தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கவனித்து வருகிறார். படத்தில் கதாநாயகனாக "மிர்ச்சி' சிவா கமிட்டாகி யுள்ளார். பிரபல ஓ.டி.டி. நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் அல்லது மத்தியில் தொடங்க வுள்ளது.

பொதுவாக ராம் படங்களில் ஹீரோ கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரமாகவே இருக்கும். ஆனால் தற்போது நடிக்கவுள்ள "மிர்ச்சி' சிவா தொடர்ந்து நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள் ளார். இதனால் இரு வரின் காம்பினேஷனில் உருவாகும் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள் ளது.

-கவிதாசன் ஜெ.